ஒரு வாரத்தில் விசாரணை, 21வது நாளில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் குறித்த வழக்குகளை நீடிப்பதும் அதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் கருணை மனு என்ற பெயரில் சில வருடங்களை கடத்துவதும் தொடர்ந்து வருவதால் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
இதனால்தான் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு கொளுத்திய குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போது போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் பாராட்டுகள் கிடைத்தது. இதே என்கவுண்டருக்கு பதிலாக உரிய நாட்களில் விசாரணையை முடித்து தண்டனை வழங்கி இருந்தால் மக்கள் திருப்த்தி அடைந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் சமீபத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில் சட்டமொன்று வழிவகை செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று அந்த சட்டம் ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரே வாரத்தில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்கள் அல்லது மூன்று வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க இந்த புதிய சட்ட மசோதா வழிவகை செய்துள்ளது.
இந்த சட்ட சட்ட மசோதா இன்று ஆந்திர சட்டப்பேரவை யில் நிறைவேறியதை அடுத்து இனிமேல் பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு 21வது நாளில் தூக்கு தண்டனை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த வழிமுறையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments