ஒரு வாரத்தில் விசாரணை, 21வது நாளில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் குறித்த வழக்குகளை நீடிப்பதும் அதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் கருணை மனு என்ற பெயரில் சில வருடங்களை கடத்துவதும் தொடர்ந்து வருவதால் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

இதனால்தான் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு கொளுத்திய குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போது போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் பாராட்டுகள் கிடைத்தது. இதே என்கவுண்டருக்கு பதிலாக உரிய நாட்களில் விசாரணையை முடித்து தண்டனை வழங்கி இருந்தால் மக்கள் திருப்த்தி அடைந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் சமீபத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில் சட்டமொன்று வழிவகை செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று அந்த சட்டம் ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரே வாரத்தில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்கள் அல்லது மூன்று வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க இந்த புதிய சட்ட மசோதா வழிவகை செய்துள்ளது. 

இந்த சட்ட சட்ட மசோதா இன்று ஆந்திர சட்டப்பேரவை யில் நிறைவேறியதை அடுத்து இனிமேல் பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு 21வது நாளில் தூக்கு தண்டனை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த வழிமுறையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
 

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' சென்சார் தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'ஹீரோ' திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

கழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..! வீடியோ.

கனடா வான்கோவர் தீவில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித்தியாசமான சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்

இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது

வெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.

கேரள மாநிலம், கொல்லம் அஞ்சுமூக்குப் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ஷைலா. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.