பிரபல தமிழ் நடிகரின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

தமிழ், தெலுங்கு நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 74

ஜெயப்பிரகாஷ் ரெட்டி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மரண மடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆறு, உத்தமபுத்திரன், தருமபுரி, ஆஞ்சநேயா, சின்னா உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி.

நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மறைவிற்கு தமிழ், தெலுங்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தனது இரங்கலை தெரிவித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து தனி பாணியில் நடித்த நடிகர் என்றும், அவருடைய டயலாக் டெலிவரி மற்றும் மேனரிசம் அற்புதமாக இருக்கும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

6 மாதத்திற்கு பின் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ரியோராஜ்!

'கனா காணும் காலங்கள்' உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகர் ரியோராஜ், அதன்பின் சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'

இது என்ன வட இந்தியாவுக்கு மட்டுமான கூட்டமா? ஆர்கே செல்வமணி ஆவேச அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறப்பது எப்போது? என்பது குறித்த ஆலோசனை இன்று நடைபெறவுள்ளது.

B.A, B.Sc, B.Com, B.Tech டிகிரி முடித்தவர்கள் நாய் பராமரிக்க விண்ணப்பிக்கலாம்… பதற வைக்கும் விளம்பரம்!!!

B.A, B.Sc, B.Com, B.Tech போன்ற டிகிரிக்கு இணையான படிப்பை படித்தவர்கள் நாய் பராமரிக்கும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? நாளை தெரிய வாய்ப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 5 மாதங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.

லாக்டவுன் தளர்வுக்கு பின் ஆன்மீக சுற்றுலா சென்ற வெங்கட்பிரபு குழுவினர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் வீட்டைவிட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை