எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் சோகத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருடன் பழகிய நாட்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்களை திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்றும் திரையுலகினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள் பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் இருப்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களும் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் இன்னொரு அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் பல்வேறு சாதனைகள் புரிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

புதுவை மற்றும் ஆந்திர முதல்வர்களை அடுத்து தமிழக முதல்வரும் விரைவில் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்

பாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

நடிகை குஷ்பு தைரியமான பெண்மணி, அவர் பாஜகவில் இணைய வேண்டுமென பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா???

சீனா நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை மக்கள்மீது கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக ஆக்கபூர்வமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் இதனையடுத்து அவருக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களும் ஒரு சிலர் மட்டும் கண்டனமும் தெரிவித்து

விஜயகாந்த் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.