புளுகுமூட்டை சினேகன், நாட்டாமை நமீதா! பட்டப்பெயர் வைத்து வெளியேறிய அனுயா
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனுயா வெளியேற்றப்பட்டார். அனுயா, ஜூலி இருவரில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளதாக நேற்று முன் தினம் கூறப்பட்டாலும் ஜூலி வெளியேற வாய்ப்பே இல்லை என்பது தான் அனைவரின் கணிப்பாக இருந்தது.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனுயா, கமல்ஹாசனிடம் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயரை தெரிவித்தார்.
இதன்படி அனுயா கொடுத்த பட்டப்பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு:
ஜூலி – வாயாடி
ரைசா – பயந்தாங் கோழி
ஆரவ் – ஆணழகன்
பரணி – வெள்ளந்தி
கஞ்சா கருப்பு – அதிகப்பிரசங்கி
காயந்தி ரகுராம் – வில்லன்/வில்லி
நமீதா – நாட்டாமை
சினேகன் – புளுகுமூட்டை
ஸ்ரீ – நல்ல மனசுகாரர்
ஆர்த்தி – சாப்பாட்டுராமர்
கணேஷ் வெங்கட்ராமன் – பச்சோந்தி
ஓவியா, சக்தி, வையாபுரி ஆகிய மூவருக்கும் அவர் எந்த பட்டப்பெயரையும் கொடுக்கவில்லை. மேலும் கமல்ஹாசனுக்கு 'தலைவலி' என்ற பட்டப்பெயரை வழங்கி பின்னர் அதனை திரும்ப பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகர் ஸ்ரீ உடலநலக்கோளாறு காரணமாக வெளியேறியுள்ளார். தற்போது அனுயாவும் வெளியேறிவிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13 பங்கேற்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com