ஓடிடி ரிலீஸ்: ரசிகர்களை சமாதானப்படுத்திய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. இதனால் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து திரையரங்குகள் திறக்க இன்னும் சுமார் மூன்று மாத காலம் ஆகலாம் என்ற காரணத்தினால் பல தயாரிப்பாளர்கள் ஒடிடி பிளாட்பாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ கீர்த்தி சுரேஷின் ’பெங்குவின்’, அமிதாப்பின் ’குலாபோ சிடாபோ’ உள்பட பல திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ திரைப்படமும் ஒடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’பாகிமதி’ திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அனுஷ்காவின் திரைப்படம் பிரமாண்டமாக ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையிட இருந்த திரைப்படம்தான் ’நிசப்தம்’. இந்த நிலையில் இந்த படம் திடீரென ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆவதால் அனுஷ்காவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து அனுஷ்கா தனது ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த சிரமத்தில் இருப்பதால் அவர் எடுக்கும் முடிவிற்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவருடைய கஷ்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட்டின் மைக்கேல் மேட்சன் என்பவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்வீட் கொடுக்க வந்த பெண் ஊழியருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த அதிகாரி: வைரலாகும் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிக்கு பிறந்தநாள் ஸ்வீட் கொடுக்க வந்தபோது அந்த பெண்ணை இழுத்து பிடித்து லிப்லாக் முத்தம்

குடிகாரர்கள் எதிரொலி: சேவையை நிறுத்த போகிறாரா ராகவா லாரன்ஸ்?

ஒருபக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் தமிழக அரசு, பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் சூப்பர் புயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

கடந்த சில ஆண்டுகளாகவே வங்ககடலை ஒட்டி புயல்கள் தோன்றி, கரையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

கொரோனா பரவல்:   நேற்று ஒரேநாளில் 4 ஆவது இடத்தைப் பிடித்து அதிச்சியை ஏற்படுத்திய இந்தியா!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து கொண்டே வருகிறது.

1500ஐ நெருங்கும் ராயபுரம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 668 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்