அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. உறுதி செய்த இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’பாகமதி’. ஜி. அசோக் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்திருந்தனர்.
தமன் இசையமைப்பில் உருவான இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீசானது. இந்த படம் பட்ஜெட்டை விட இருமடங்கிற்கும் அதிகமான லாபத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ’பாகமதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இந்த படத்தின் இயக்குனர் அசோக் திட்டமிட்டுள்ளதாகவும், இதனை அவர் உறுதி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முதல் பாகத்தை விட அனுஷ்காவுக்கு இரண்டாம் பாகத்தில் வலுவான கேரக்டர் இருக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அனுஷ்கா, ஒரு தெலுங்கு மற்றும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்ததும், அவர் ’பாகமதி 2’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments