பட வாய்ப்புக்காக படுக்கை: ரஜினி, அஜித், விஜய் பட நாயகியின் பகீர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்த குற்றச்சாட்டை ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பலர் கூறியுள்ள நிலையில் இந்த மீடூ குற்றச்சாட்டை ரஜினி, அஜித், விஜய் பட நடிகையும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. மேலும் ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் மூலம் இவர் உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் இருந்து வருவதாகவும், அந்த தொல்லையைத் ஆரம்பகட்டத்தில் தனக்கும் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் அனுஷ்கா கூறினார். சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் என்றும், அந்த விஷயம் எனக்கும் நடந்தது என்றும், ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அதற்கு பிறகு என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று கூறினார்.
திரையுலகில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும், ஆனால் திரையுலகம் கவர்ச்சியானது என்பதால் அது வெளியே தெரிகிறது என்றும் அனுஷ்கா கூறினார். மேலும் ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு என்றும் அனுஷ்கா மேலும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments