விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா ஷெட்டி காயம்

  • IndiaGlitz, [Wednesday,June 26 2019]

சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சயிர நரசிம்மரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் 'பாகுபலி' புகழ் அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய காட்சியின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்தால் அவரது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பாத அனுஷ்கா, படப்பிடிப்பு முடிந்தபின்னர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இன்னும் சில வாரங்கள் முழு ஓய்வு தேவை என அறிவுறுத்தியதை அடுத்து காயம் குணமான பின்னர் அவர் விரைவில் மீண்டும் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்கா நடித்த 'பாகிமதி' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தயாராகி வரும் 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முழுக்க முழுக்க விஜய்சேதுபதியிஸம்: 'சிந்துபாத்' படத்தின் முதல் விமர்சனம்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது

'எஸ்கே 17' பட அப்டேட்டை தெரிவித்த விக்னேஷ் சிவன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது அவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

சிந்துபாத் படத்தின் சிறப்பான ரன்னிங் டைம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நாளை வெற்றிகரமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில்

சென்னை தண்ணீர்ப்பஞ்சம் குறித்து டைட்டானிக் ஹீரோவின் பதிவு!

சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடிவருகிறது. மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுபோய்விட்டது.