த்ரிஷாவுக்கு பதில் யார்? சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' நாயகி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிவரும் ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா திடீரென அந்த படத்திலிருந்து விலகினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தன்னுடைய கேரக்டர் குறித்து அவர் திருப்தி அடையாததால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷாவுக்கு பதில் முன்னணி நடிகைகளிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. முதல் கட்டமாக காஜல் அகர்வாலை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அவரது சம்பளம் மிக அதிகமாக இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது கொரட்டலா சிவா தரப்பிலிருந்து பாகுபலி நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், இது குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பாசிட்டிவ் பதில்கள் வந்திருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ’சயிர நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிரபுதேவா, சஞ்சிதா ஷெட்டி இணைந்து சந்தித்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் என்பவரை

என்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்???

கடந்த 2008 டிசம்பரில் மத்தியப் பிரதேச சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி

பிரபல நடிகரின் மகனை காதலிகின்றாரா யாஷிகா? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாசிகா ஆனந்த் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி வருவார் என்று தெரிந்தே 

டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது

திமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!

திமுகவின் பொதுச் செயலாளராக 1977 முதல் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை யொட்டி திமுகவின் அடுத்த பொதுச்