close
Choose your channels

பாசத்துடன் அனுஷ்கா ஷெட்டி கொடுத்த முத்தம்.. இவ்வளவு பாசமா?

Thursday, April 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியின் தந்தை பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் பாசத்துடன் தனது தந்தைக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ’ரெண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா சர்மா. அதன் பின் தெலுங்கில் பிஸியான அவர் ’அருந்ததி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து விஜய்யின் ’வேட்டைக்காரன்’ சூர்யாவின் ’சிங்கம்’ விக்ரமின் ‘தெய்வ திருமகள்’ கார்த்தி நடித்த ’அலெக்ஸ் பாண்டியன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.



அஜித்துடன் அவர் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் அவரது நடிப்புக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின்னர் அவர் நடித்த ’பாகுபலி’ ‘பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு உலக அளவில் பெயர் பெரும் புகழும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனுஷ்காவின் தந்தை பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதை அடுத்து பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தனது தந்தைக்கு பாசமாக அவர் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு அப்பாவின் மீது அனுஷ்காவுக்கு இவ்வளவு பாசமா? போன்ற ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment