அனுஷ்கா ஷெட்டியின் பான் இந்திய திரைப்படம்: "Ghaati" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் இன்று இப்படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பிண்டி மற்றும் பங்கா திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, படத்தில் அவரது பாத்திரம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இந்த போஸ்டரில் உள்ள ஒவ்வொரு அம்சமும், ரத்தம் தெறிப்பதில் இருந்து கதாப்பாத்திரத்தின் அதிரடி தோற்றம் வரை, இந்தப்படம் மிக அழுத்தமான, யதார்த்தத்தை தத்ரூபமாக காட்டும் படமாக இருக்குமென்பதை சொல்கிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டுகிறது.
விக்டிம், கிரிமினல், லெஜண்ட் என்ற டேக்லைன், “Ghaati” வழக்கமான கதையைத் தாண்டியதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது; இது மனிதநேயம், உயிர்வாழ்வு மற்றும் மீட்பு பற்றிய ஆய்வாக உள்ளது. க்ரிஷின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். இது சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட வரலாற்று நாயகியின் கதை.
Ghaati ஒரு க்ரிப்பிங் ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது, க்ரிஷ் அனுஷ்காவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் நாயகியாக வழங்கவுள்ளார். இப்படம் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது.
ராஜீவ் ரெட்டி, சாய்பாபு ஜகர்லமுடி தயாரித்துள்ள Ghaati திரைப்படத்தில் சிறப்பு மிக்க பிரபலமான தொழில்நுட்பக் குழு உள்ளது. மனோஜ் ரெட்டி கடசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைக்கிறார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை வழங்க, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.
அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரங்களுடன் பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments