விராத் கோஹ்லிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களமிறங்கிய அனுஷ்கா ஷர்மா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நட்சத்திர ஜோடிகளான விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா தம்பதிகளில், கிரிக்கெட் விளையாட்டில் விராட் கோலியும், பாலிவுட் திரையுலகில் அனுஷ்கா சர்மாவும் ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர் என்பது அறிந்ததே
இந்த நிலையில் தற்போது விராட் கோலியை போட்டியாக கிரிக்கெட்டில் களம் இறங்கி உள்ளார் அனுஷ்கா சர்மா, ஆம், பெண்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி என்பவரது வாழ்க்கை வரலாறு படத்தில் அனுஷ்கா சர்மா ஜுலன் கோஸ்வாமி கேரக்டரில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து அனுஷ்கா படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படங்களுக்கு கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள், ‘விராட் கோலிக்கு போட்டியாக அனுஷ்கா சர்மா களமிறங்கிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் கோஸ்வாமி சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் என்பதும், இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு போஸ்ட் ஸ்டாம்ப் ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com