ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்குகிறாரா அனுஷ்கா ஷர்மா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வீரர்கள் இதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் சில செயல்கள் இதனை உண்மையாக்குகிறது.
உலகக்கோப்பை போட்டியின்போது ரோஹித் கூறிய சில ஆலோசனைகளை விராத் கோஹ்லி ஏற்று கொள்ளவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில் விராத் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித்சர்மா அன்ஃபாலோ செய்துவிட்டார். ஆனாலும் விராத் கோஹ்லி, இன்னும் ரோஹித்தை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து கொண்டுதான் இருக்கின்றார்.
இந்த நிலையில் விராத் கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” ( “A wise man once said nothing. Only truth can shake hands with silence in a mess of false appearances”) என்று தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அனுஷ்காவின் இந்த பதிவு, ரோஹித்ஷர்மாவுக்கான பதிவு என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால் கேப்டன், துணை கேப்டன் இடையே இருக்கும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com