எளிமையான தோற்றத்தால் வசீகரித்தவர்… பாலிவுட் நடிகையின் கேன்ஸ் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொழில் அதிபராகவும் இருந்துவரும் நடிகை ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அனுஷ்கா சர்மா. 2008 இல் ‘ரப் நே பனா தி ஜோடி’ திரைப்படத்தில் அறிமுகமான இவர் அறிமுகப் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் நடிப்பு திறமையால் கட்டிப்பேட்டார். தொடர்ந்து ‘பேண்ட் பாஜா பாராத்’, ‘ஜப் தக் ஹைஜான்’ போன்று பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் 25 வயதிலேயே தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துவிட்டார்.
அந்த வகையில் 2014 இல் ‘பிகே‘ திரைப்படத்தில் நடிகர் அமீர்கானுடன் நடித்து இந்திய அளவில் பிரபலமானர். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 டிசம்பர் 11 இல் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியைக் காதலித்து இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார் என்பதும் இந்த ஜோடிக்கு வாமிகா எனும் பெண் குழந்தை இருப்பதும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவில் ஜவரி ரிச்சர்ட் குயின் வடிவமைப்புக் கொண்ட வெள்ளை நிற ஆடையை அவர் அணிந்திருந்தார். எளிமையான தோற்றத்துடன் வசீகரம் கொண்ட இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டைக் குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com