நடிகை அனுஷ்கா சர்மா சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பு தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா தனது சினிமா வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதுகுறித்த கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
பெங்களூரில் பிறந்து மாடலிங் துறையில் பிரபலமான அனுஷ்கா சர்மா கடந்த 2008 இல் ‘ரப் நே பனா தி ஜோடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனது அபாரமான நடிப்பு மற்றும் துள்ளலான அழகின் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்ட நடிகை அனுஷ்கா சர்மா பல வெற்றிப்படங்களில் நடித்தார். அதுவும் நடிகர் அமீர்கானுடன் இணைந்து ‘பிகே’ திரைப்படத்தில் நடித்தன்மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்நிலையில் 25 வயதிலேயே தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்த நடிகை அனுஷ்கா தொடர்ந்து ஆடை தொழிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இப்படி நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகை அனுஷ்கா முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டனாகவும் தற்போது முக்கிய வீரராகவும் இருந்துவரும் விராட் கோலியை காதலித்து கடந்த 2017 இல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு 2021 இல் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை அனுஷ்கா சர்மா தற்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் திரைப்படத்தில் நடிப்பதை மிகவும் ரசிக்கிறேன். ஆனால் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம அளவில் நேரத்தை செலவிட விரும்புகிறேன். மேலும் குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
அதனால் முன்பு நடித்தது போல அதிக படங்களில் நடிக்க விரும்பவில்லை. நான் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை அனுஷ்கா சர்மா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியிருக்கும் தகவல் பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான சக்தா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments