நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் அனுஷ்கா சர்மா… வைரலாகும் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மா குழந்தை பிறந்த பிறகு கடந்த 3 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் அவருடைய “சக்தா எக்ஸ்பிரஸ்“ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
திருமணத்திற்கு பிறகு அனுஷ்கா சர்மா கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து “ஜீரோ“ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் அதேநேரத்தில் வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து அனுஷ்கா- விராட் கோலி ஜோடிக்கு குழந்தை பிறந்ததால் அனுஷ்கா சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
ஆனால் விளம்பரப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த அவர் தற்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “சக்தா எக்ஸ்பிரஸ்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் டிரைலர் கடந்த 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அனுஷ்கா தனது சகோதரர் கர்ணேஷ் ஷர்மாவுடன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ப்ரோசித்ராய் இயக்கியிருக்கிறார். அனுஷ்கா இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஒருசில ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவின் பெங்காலி உச்சரிப்பைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதோடு நடிகை அனுஷ்கா இந்தத் திரைப்படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் அவருடைய உச்சரிப்பு சரியாக இல்லை. ஒரு பெங்காலி நடிகையை வைத்து படத்தை உருவாக்கி இருக்கலாம் எனக் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலகிலேயே அதிவேக பந்து வீச்சாளரான ஜுலான் கோஸ்வாமி கேரக்கடரில் நடிகை அனுஷ்கா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
It is a really special film because it is essentially a story of tremendous sacrifice. Chakda Xpress is inspired by the life and times of former Indian captain Jhulan Goswami and it will be an eye-opener into the world of women’s cricket. pic.twitter.com/eRCl6tLvEu
— Anushka Sharma (@AnushkaSharma) January 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments