பெரும் நிறுவனங்களோடு கைக்கோர்த்த நடிகை அனுஷ்கா சர்மா… 400 கோடிக்கு முதலீடு!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா முன்னணி ஓடிடி நிறுவனங்களோடு இணைந்து 400 கோடி அளவிற்கு புதிய சினிமா மற்றும் வெப் சீரிஸ் தயாரிப்புகளை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா ஏற்கனவே தனது சகோதரர் கர்னேஷ் சர்மாவோடு இணைந்து Clean Slate Films எனும் பெயரில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் “சக்தா எக்ஸ்பிரஸ்“ திரைப்படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து இருக்கிறது. சொல்லப்போனால் நடிகை அனுஷ்காவின் குடும்ப நிறுவனமாகவும் இது இருந்து வருகிறது.

மேலும் Clean Slate Films தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்துவரும் நடிகை அனுஷ்கா தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தோடு இணைந்து அடுத்த 18 மாதங்களில் 8 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் தயாரிப்பின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட 400 கோடி எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ் 3 படத்தை Clean Slate Films நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகக் கூறியதையடுத்து இந்தத் தகவல் உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து எத்தனைப் படங்கள் உருவாக்கப்படும் என்பது மட்டுமே இன்னும் தெரியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.