ஹெல்மெட் சர்ச்சை… நடிகர் அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவிற்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு?
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பை சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அவர்களுக்கு மும்பை போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து இருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி இடம் வகித்து வரும் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகச் சமீபத்தில் தங்களது கார்களை விட்டுவிட்டு இருசக்கர வகானத்தில் பயணம் செய்திருந்தனர். நடிகை அனுஷ்கா சர்மா சென்ற சாலையில் மரம் வெட்டப்பட்டு இருந்ததால் அவர் தன்னுடைய பாதுகாவலரின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றார். ஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.
அதேபோல நடிகர் அமிதாப் பச்சன் சென்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவர் யாரென்றே தெரியாத ஒரு நபரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைராலாகி விமர்சனத்திற்கு ஆளானது.
எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீஸார் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகை அனுஷ்காவிற்கு 10,500 ரூபாயும் நடிகர் அமிதாப் பச்சன் சென்ற வாகனத்திற்கு 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் மும்பை சாலையில் பயணித்து இருந்தாலும் அவர்கள் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com