பாகுபலி வழியில் 'ருத்ரம்மாதேவி'
- IndiaGlitz, [Saturday,August 15 2015]
இந்திய திரையுலகில் பல சாதனைகள் படைத்த 'பாகுபலி' திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெற்றி நடை போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்த புளு ஸ்கை நிறுவனம், தற்போது மற்றொரு சரித்திர படமான அனுஷ்காவின் 'ருத்ரம்மாதேவி' படத்தையும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை புளூ ஸ்கை நிறுவனம் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
கி.பி.1260ஆம் ஆண்டு 14 வயதில் ராணியாக பதவியேற்றுக்கொண்ட ருத்ரம்மாதேவியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் 2D மற்றும் 3Dயில் திரையிட உள்ளதாகவும், கூறப்படுகிறது.
அனுஷ்கா ஷெட்டி, ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், அஜய், நித்யாமேனன், கேதரின் தெரசா மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் அல்லு அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பு. இந்த படத்திற்கான பின்னணி இசையை இசைஞானி லண்டன் ஸ்டுடியோவில் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தை குணசேகர் தயாரித்து இயக்கியுள்ளார்.