ஐந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா?

  • IndiaGlitz, [Friday,December 11 2015]

'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா நடிக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.


இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு 'ருத்ராக்ஷா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'ருத்ராக்ஷா' கதையை கேட்டதும் அனுஷ்கா இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும், இந்த படத்திற்காக அனுஷ்கா தன்னுடைய கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஐந்து இளம் கதாநாயகர்களை கிருஷ்ண வம்சி அறிமுகப்படுத்த உள்ளதாகவும், ஆனாலும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது.

More News

வெள்ள நிவாரண நிதி: கார்த்தியிடம் கமல்ஹாசன் கொடுத்த ரூ.15 லட்சம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

'தனி ஒருவன்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயம் ராஜா விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார்...

தனுஷின் தங்கமகன்' இன்று சென்சார்?

அனேகன்' மாரி' படங்களை தொடர்ந்து இவ்வருடத்தின் மூன்றாவது தனுஷ் படமான 'தங்கமகன்' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும்...

'ரஜினிமுருகன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியது....

தனுஷின் 'தங்கமகன்' டிரைலர் விமர்சனம்

தனுஷ் நடித்த தங்கமகன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்...