அனுஷ்கா பட ஹீரோவுக்கு என்ன ஆச்சு? கை கால் எலும்பு முறிந்த அதிர்ச்சி புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அனுஷ்கா ஷெட்டி படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விபத்து ஒன்றில் சிக்கி கை கால் எலும்பு முறிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் பொலிஷிட்டி & மிஸஸ் பொலிஷிட்டி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் நவீன் பொலிஷிட்டி. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நவீன் பொலிஷிட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் வலது கையில் காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தன்னால் நடக்க முடியவில்லை என்றும் ஆனாலும் உங்களுடைய பிரார்த்தனையால் சீக்கிரம் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் சில மாதங்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்து விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா உள்பட பல திரையுலக பிரபலங்களும் உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக நீங்கள் குணமாகி மீண்டு வருவீர்கள், உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்’ என்று கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com