அனுஷ்காவின் அடுத்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரமாண்டமான வெற்றி படங்களை அடுத்து நடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு பாகிமதி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் அவர் தற்போது சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவனுடன் ஒரு படத்தில் அனுஷ்கா நடத்தி வருகிறார் என்றும் இந்த படத்திற்கு 'சைலன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகி வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா செட்டி, மாதவன், அஞ்சலி, சுப்புராஜ், ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
The #Silence is about to be broken earlier than expected!!!#NissabdhamFirstLook out today at 5 PM !!!! ???????? #Nissabdham #AnushkaShetty @ActorMadhavan @yoursanjali @actorsubbaraju @ishalinipandey @konavenkat99 @hemantmadhukar @KonaFilmCorp @peoplemediafcy @vivekkuchibotla pic.twitter.com/zwUdM7bVlX
— Anushka Shetty™ (@TeamAnushkaFC) July 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments