அனுஷ்காவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

அனுஷ்கா நடித்த ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2018ல் பாகமதி என்ற திரைப்படமும் வெளிவந்தது. அதன்பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக அனுஷ்கா படங்கள் வெளியாகாத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’நிசப்தம்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

மாதவன், அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மற்றும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய வாரம் அனுஷ்காவின் ’நிசப்தம்’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.