அனுஷ்கா ஷெட்டியின் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ ‘பாகுபலி 2’ ஆகிய சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் நடித்து உலக அளவில் புகழ் பெற்றவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாதவனுடன் ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்தை நடித்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமையல் கலை வல்லுநராக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இந்த படம் ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் அனுஷ்காவின் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபாஸின் 'சலார்' படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

சமீபத்தில் பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் 'சலார்' என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேண்டுமென்றே உடலுறவை தவிர்த்த மனைவி? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

திருமண வாழ்வில் வேண்டுமென்றே உடலுறவை தவிர்ப்பது மனக்கொடுமைக்கு சமம் என்று கூறி டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த திமுக அமைச்சர்: என்ன காரணம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக அமைச்சர் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 68' படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? அதிர்ச்சி தகவல்..!

https://www.indiaglitz.com/thalapathy-vijay-political-entry-taking-break-from-acting-after-thalapathy-68-leo-vmi-tamil-news-339245

திமுகவில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாடு: 'மாமன்னன்' படம் குறித்து பா ரஞ்சித்..!

சமீபத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் குறித்து தனது கருத்தை இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து