அனுஷ்கா படம் உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்?  ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் உள்பட இரண்டு தமிழ் படங்களும் ஒரு சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன. இது குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.

அனுஷ்காவின் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஆதி, ஹன்சிகா நடிப்பில் உருவான ‘பார்ட்னர்’ என்ற திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘மிஸ்டர் பிரக்னண்ட்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘நீ வண்டே நேனு’ என்ற தெலுங்கு திரைப்படம் சினி பஜார் என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் 'OMG2’ என்ற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘குஃபியா’ என்ற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘தி நன்’ என்ற ஆங்கில படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, த்ரிஷாவின் ‘தி ரோட்’ மற்றும் ’இறுகப்பற்று’ மற்றும் ‘800’ ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ளது.