உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றது உண்மையா? அனுஷ்கா பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகுபலி, ருத்திரம்மாதேவி ஆகிய வெற்றி படங்களுக்கு பின்னர் சமீபத்தில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அடுத்த படங்களான 'சிங்கம் 3' மற்றும் 'பாகுபலி 2' குறித்த சில விபரங்களையும் தனது குண்டு உடலை குறைக்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பாகுபலி, ருத்திரம்மாதேவி ஆகிய வரலாற்று படங்களை அடுத்து மீண்டும் கமர்ஷியல் படமான 'சிங்கம் 3' படத்திற்கு திரும்பியுள்ளதாக அனுஷ்கா கூறியுள்ளார்.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தான் 17 கிலோ வரை எடையை கூட்டியுள்ளதாகவும், தற்போது பாகுபலி 2' படத்திற்காக மீண்டும் எடையை குறைத்து வருவதாக கூறிய அனுஷ்கா இதுவரை 9 கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் இன்னும் 8 கிலோ குறைத்ததும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எடையை குறைக்க தான் வெளிநாடு சென்றதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்றும், இயற்கையான முறையில் எடையை குறைக்க தன்னால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2' படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறிய அனுஷ்கா இந்த படத்தில் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் 'இந்த படத்தில் தனக்கு கத்திச்சண்டை காட்சிகள் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout