அரபு கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்… இந்தியக் கேப்டனுக்கு குவியும் வாழ்த்துகள்!!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது 32 ஆவது பிறந்த நாளை துபாயில் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தின்போது அவருடைய மனைவியான அனுஷ்கா சர்மாவும் உடன் இருந்தார். ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விராட் கோலி விளையாடி வருகிறார். இந்த அணி ப்ளே ஆப் தகுதி சுற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் துபாயில் தங்கியுள்ள விராட் கோலி தனது 32 ஆவது பிறந்த நாளை தனது அணியினருடன் கொண்டாடினார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது கடும் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் கேக்கை பெரிய அரபு கத்திக் கொண்டு வெட்டும் கோலி முதலில் தனது மனைவிக்கு கேக்கை கொடுக்கிறார். உடன் பெங்களூ அணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இந்த நிகழ்வில் சாஹலின் வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மாவும் பங்கேற்றார். அவர் விராட் கோலியின் பிறந்த நாள் கேக் கட்டிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதை நான் அதிர்ஷ்டமாக உணருகிறேன். நீங்களும் உங்களின் மனைவியும் நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் அன்பானவர்கள்” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளார்.