நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவின் படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் இவர் நடித்த 'பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ திரைப்படங்கள் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்த படம் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ராதான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Introducing our most favourite combo; #MissShettyMrPolishetty to you all🤩
— UV Creations (@UV_Creations) March 1, 2023
Get ready for a Rollercoaster ride of Entertainment this Summer@MsAnushkaShetty @NaveenPolishety @filmymahesh @radhanmusic #NiravShah #RajeevanNambiar #KotagiriVenkateswararao @UV_Creations @adityamusic pic.twitter.com/mkG8bWrMnz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments