கமல் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்.. ஒரு சில மணி நேரத்தில் பாஜகவில் இணைப்பு..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பெண் பிரபலம் ஒருவர் திடீரென விலகிய நிலையில் அதன் பின் ஒரு சில மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் அனுஷா ரவி. இவர் இன்று திடீரென அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புக்குரிய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பதமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி

இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புகளை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிக மிக சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுகளை பெற்றதில் மகிழ்ச்சி. இருப்பினும் தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி சில மணி நேரத்தில் பாஜகவில் இணைந்தார். சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் அவர் தன்னை இணைத்து கொண்டார்.

More News

ஒரே படத்தில் இணையும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' 'பிரேமலு' பிரபலங்கள்.. விரைவில் அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்களான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' மற்றும் 'பிரேமலு' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்

பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் பட நாயகி.. கணவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவு..!

ஜிவி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கணவர் குறித்து

இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? விஜய் ஆண்டனி விளக்கம்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்த

இந்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்தா? பிரபலம் கூறிய மாஸ் தகவல்..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சூர்யாவின் 43 வது படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளதை அடுத்து 'கங்குவா' மற்றும் 'சூர்யா 43' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக

'கோட்' திரைப்படத்தில் த்ரிஷாவின் டான்ஸ்.. இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது