பிரபல நடிகரை புகைப்படம் எடுக்க மறுத்த பத்திரிகையாளர்கள்!

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் , சமீபத்தில் தனிப்பட்ட வகையில் சொந்த பணியில் இருந்தபோது ஒரு பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்திருந்தார். இந்த புகைப்படம் வெளியானதில் கடும் கோபம் கொண்ட அவர் புகைப்பட கலைஞர்களை திட்டியதோடு, உங்களுக்கு வேறு வேலையே என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் டாப்சியின் 'கேம் ஓவர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யப் இதுகுறித்து பேசியபோது, 'பத்திரிகையில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்கள் வேறொருவரின் தனிப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்., நான் தனிப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் என்னை புகைப்படம் எடுத்தால் எனது அந்தரங்கத்தில் ஊடுருவதாகத்தான் அர்த்தம். இந்த மாதிரியான நேரங்களில் நான் செல்பி கூட எடுக்க அனுமதிப்பதில்லை. எனக்கு சரியென்று தோன்றியதால் இதனை நான் கூறுகிறேன்' என்று கூறினார்.

புகைப்பட கலைஞர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப்பை மட்டும் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து!

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

காண்ட்ராக்டர் நேசமணிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார்

அஜித்தின் அரசியல் பார்வை குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்

அஜித்துக்கு அரசியல் பார்வை மட்டுமே இருப்பதாகவும், அரசியல் ஆசை இல்லை என்றும் பிரபல ஊடகவியலார் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?

சூர்யாவுடன் சாய்பல்லவி நடித்த 'என்.ஜி.'கே' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஏன் வீண் கலகம்? ஊடகங்களுக்கு நடிகர் பிரச்சன்னா கேள்வி!

மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற ரமேஷ் போகிரியால் நிஷாங் அவர்களிடம் புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு நேற்று அளிக்கப்பட்டுள்ளது