1 மணி நேரத்திற்கு 5 லட்ச ரூபாய்.. பணம் கொடுத்தால் மட்டுமே இனி சந்திப்பு: திரையுலக பிரபலம் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,March 24 2024]

இனிமேல் என்னை சந்திக்க வருபவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் முன்கூட்டியே பணம் கொடுக்க வேண்டும் என்றும் திரை உலக பிரபலம் ஒருவர் நிபந்தனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் அதேபோல் விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ’சினிமா சம்பந்தமாக என்னை யாராவது சந்திக்க வந்தால் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், 10 முதல் 15 நிமிடங்கள் என்றால் ஒரு லட்ச ரூபாய், 30 நிமிடங்கள் என்றால் 2 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும், அந்த பணத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

பல சந்திப்புகள் எனது நேரத்தை வீணடித்து விட்டது, சினிமா சம்பந்தமாக என்னை சந்திக்க பலர் வருகின்றனர், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சில படங்களை ஊக்குவித்தேன், ஆனால் தன்னை ஜீனியஸ் என்று நினைத்துக் கொண்டு வருபவர்களிடம் இனி நான் என் நேரத்தை இலவசமாக செலவழிக்க விரும்பவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே இனி உங்களால் இந்த பணத்தை கொடுக்க முடியும் என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள், இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார், இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

More News

பறக்கும் பணம், தங்கம், இரும்புச் சங்கிலி.. பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் ஜெயம் ரவியின் 'ஜெனி' ஃபர்ஸ்ட்லுக்..!

ஜெயம் ரவி நடித்து வரும் 'ஜெனி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திடீரென இணைந்த அனிருத் - ஜடேஜா கூட்டணி.. என்னவா இருக்கும்?

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படம் எதற்காக இருக்கும் என்று கேள்வி

நான் எதிர்பாராத காதல்.. நான் எதிர்பாராத திருமணம்.. 'குட்நைட்' நடிகையின் நெகிழ்ச்சியான பதிவு..!

மணிகண்டன் நடித்த 'குட்நைட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மீதா ரகுநாத் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் நெகிழ்ச்சியான

சென்னையில் சூப்பர் ஹிட் படத்தை பார்த்த தல தோனி.. உடன் வந்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ..!

சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது

பிரபலத்துடன் ஒற்றைக் காலில் நிற்கும் கமல்ஹாசன்.. வைரல் புகைப்படம்..!

பிரபல டான்ஸ் மாஸ்டர் உடன் ஒற்றைக் காலில் நிற்கும் புகைப்படத்தை உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.