ஜீ5 தளத்தில் வெளியாகும் 'ஹட்டி'.. அனுராக் காஷ்யப் நடித்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

ஜீ ஸ்டுடியோஸ் சஞ்சய் சாஹா மற்றும் அனந்திதா ஸ்டுடியோ ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ5 தளத்தில் திரையிடப்படவுள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய பன்மொழி கதைசொல்லி, மற்றும் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி-டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டத்தில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் நவாசுதீன் சித்திக் முதன்முறையாகத் திருநங்கையாக நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ்குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், சஞ்சய் சாஹா மற்றும் அனந்திதா ஸ்டுடியோ ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரபரப்பான ரிவென்ஜ் டிராமா ஹட்டி திரைப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று ஜீ5இல் திரையிடப்படவுள்ளது.

என்சிஆர், குர்கான் மற்றும் நொய்டாவில் தற்கால பின்னணியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது இப்படம். குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்தில் இருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, வளர்கிறான், தன் குடும்பத்தை அழித்த அந்த கும்பலின் தலைவனாக இருந்து, அரசியல்வாதியாக மாறிய அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே அவன் நோக்கம். புதுமையான களத்தில் அழுத்தமான பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது இந்த ஹட்டி திரைப்படம். அக்ஷத் அஜய் ஷர்மா மற்றும் ஆதம்யா பல்லா இணைந்து எழுதியுள்ள, 'ஹட்டி' தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப்பின்னணியை, குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

நடிகர் நவாசுதீன் சித்திக் கூறுகையில், “நான் திருநங்கை வேடத்தில் நடிப்பேன் என்று நம்பவில்லை . ஒவ்வொரு திருநங்கையும் ஒரு முழுமையான பெண்ணாக இருக்க ஆசைப்படுவதால், நான் இந்தக் கதாபாத்திரத்தை ஒரு பெண் கதாபாத்திரமாகவே அணுகினேன். இப்படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பிற்கு முன்பு, நான் திருநங்கைகளுடன் தங்கியிருந்தேன், பெண்மையைத் தழுவுவதற்கான அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது, கதாபாத்திரத்தில் நடிப்பதை விட, நான் ஒரு பெண்ணாக உணர்ந்து, அவராக இருக்க முயற்சித்தேன். இரண்டு முதல் மூன்று மணி நேரம் மேக்கப் செய்து, இந்த கதாபாத்திரத்திற்குத் தயாராவது மேலும் அதே நாளில் வேறொரு கேரக்டருக்கு மாறுவது என, படப்பிடிப்பு மிகச் சவாலானதாக இருந்தது. ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்

அனுராக் காஷ்யப் கூறுகையில், “ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக AD (உதவி இயக்குநராக) உதவியிருக்கிறார், இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். மேலும், இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ZEE5 இல் ஹட்டி படத்தின் வெளியீட்டிற்காக நான் உற்சாகமாகக் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்”.

இயக்குனர் அக்ஷத் அஜய் ஷர்மா கூறுகையில், “பழிவாங்கும், வன்முறை மற்றும் அதிகாரத்தின் போதை தரும் உலகத்தைச் சுற்றி ஒரு பழிவாங்கும் கதையைச் சொல்கிறது ஹட்டி. இது சமூகத்தின் இரக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டுவதுடன், ஒரு குற்றவாளியின் ஆன்மாவின் தேடலை ஆராய்கிறது. அரசியல்வாதியின் உலகம், திருநங்கை கேங்க்ஸ்டரின் உலகம் இரண்டையும் வடிவமைப்பதும், கதாபாத்திரங்களை உருவாக்குவதும் மிக கடினமான சவாலாக இருந்தது. ZEE5 இல் உள்ள எங்கள் பார்வையாளர்களின் இதயங்களில் 'ஹட்டி' ஒரு அழியாத முத்திரையைப் பதித்து, எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டும் என்று நம்புகிறேன்.

இயக்குனர் அருண் கூறுகையில்,“சுவாரஸ்யமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களம் கொண்ட ஹட்டி, திருநங்கைகளின் சமூகத்தைச் சித்தரிக்கும் ஒரு வித்தியாசமான பழிவாங்கும் படமாகும். இப்படத்தில் ரேவதி மா ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தற்செயலாக, படத்தில் நான் மட்டுமே பெண் கலைஞர். நீங்கள் ஹட்டியை பார்க்கும்போது திருநங்கை கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையேயான சண்டை, அவர்களின் உணர்வுகள், வாழ்க்கை மற்றும் யதார்த்தம், மட்டுமல்லாமல் அதிகார அமைப்பு மற்றும் ஊழல் நிறைந்த சமூகம் திருநங்கைகளின் பலவீனங்களையும் அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் பார்ப்பீர்கள். ஹட்டி உண்மையிலேயே வித்தியாசம் கதைக்களத்தில் நடப்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”.

செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் ஹட்டி திரையிடப்படுகிறது.