நயன்தாரா பட நடிகருக்கு 3வது திருமணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பல அவதாரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் அனுராக் காஷ்யப், நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு விரைவில் 3வது திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளது.
44 வயதான அனுராக் காஷ்யப் ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டு ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு 16 வயது ஆலியா என்ற மகள் உள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 2011ஆம் ஆண்டு கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்து அவரையும் 2015ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் தற்போது 22 வயது சுபத்ரா ஷெட்டி என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் பாலிவுட்டில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி குறித்து இருவருமே எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout