என்னுடைய பெற்றோருக்கு நான் இயக்கும் படங்கள் புரியாது - அனுராக் காஷ்யப்
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட இயக்குனர் பால்கி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்.
அப்போது திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களிடம் நீங்கள் இயக்கும் படத்தை உங்கள் குடும்பத்தினர் பார்ப்பார்களா அவர்கள் என்ன சொல்வார்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்கள் " என்னுடைய பெற்றோருக்கு நான் இயக்கும் படங்கள் புரியாது .நான் ஒரு படத்திற்கான கதையை எழுதிய பின்பு என்னுடைய திரையுலக நண்பர்களுக்கு அதை அனுப்பி வைப்பேன். அவர்கள் அதை படித்து முடித்த பின்பு அதற்கான விமர்சனத்தை கூறுவார்கள் " என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments