அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய நடிகை: முன்னாள் மனைவியின் திடீர் ஆதரவு!

  • IndiaGlitz, [Monday,September 21 2020]

பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி ஆர்த்தி பஜாஜ் என்பவர் தனது முன்னாள் கணவருக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் அனுராக்கின் முதல் மனைவி, அனுராக் நீங்கள் ஒரு ராக்ஸ்டார். நீங்கள் வழக்கம்போல தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்துக்கு குரல் கொடுங்கள். அவர்களுக்காக பாதுகாப்பான இடத்திற்காக பாடுபடுங்கள். அதை நம் மகள் விஷயத்திலேயே நான் பார்க்கிறேன். உலகில் நேர்மை மறைந்து, மூளை இல்லாதவர்களும் தோல்வி அடைந்தர்களும் நல்லதுக்காக குரல் கொடுப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றார்கள். அடுத்தவர்களை வெறுப்பதற்காக அதிக சக்தியை செலவு செய்கின்றனர். அதே சக்தியை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் இந்த உலகம் அழகிய இடமாக மாறும்.

இவர்கள் செய்வதுதான் நான் பார்த்ததிலேயே மிகவும் மலிவான உத்தி. முதலில் அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் இது போலியாக கட்டமைக்கப்பட்டது என்பதால் நான் மிகவும் சத்தமாகவே சிரித்தேன். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது குறித்து எனக்கு வருத்தம் தான். அவர்கள் அவ்வளவுதான். நீங்கள் உயரத்தில் இருந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்: பரபரப்பு தகவல்

பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தாலும் நேற்றும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும்

போறபோக்குல விளையாட்டா… 2021 கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சில வித்திரங்கள்!!!

2021 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்களின் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு: வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது முதலாவது சீசனின் போட்டியாளரான ஓவியா தான். 

கவினிடம் ஏற்பட்ட அட்டகாசமான மாற்றம்: சமூக வலைத்தளங்களில் வைரல்!

தொலைக்காட்சி தொடரில் நடித்து அதன்பின் பெரிய திரையிலும் நடிகரான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீஸனில் கலந்து கொண்டு இளைஞர்களின் ஹீரோ என புகழப்பட்டார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்… தமிழக முதல்வர் வேண்டுகோள்!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைக் குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது.