பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட நயன்தாரா பட நடிகர்

நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகருமான அனுராக் காஷ்யப், பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து பேசியபோது, ‘என்னை வேண்டுமானால் எரியுங்கள். பொதுச் சொத்துக்களை எரிக்காதீர்கள். என்னை வெறுங்கள்; ஆனால் நாட்டை வெறுக்காதீர்கள்’ என்று பேசினார். ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி செய்த ஹிட்லரும் இதேபோன்று பேசியதை சுட்டிக்காட்டிய அனுராக் காஷ்யப், பிரதமர் மோடியை அர்பன் நாஜி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அனுராக் காஷ்யப் ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்தவர் என்பதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'விக்ரம் 58' படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

விக்ரம் நடிப்பில் 'டிமாண்டி காலனி', 'இமைக்காநொடிகள்' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம் 58' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்: அட்டகாசமான அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவான '3', 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'மாரி' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் தெரிந்ததே.

சூர்யாவின் 'சூரரை போற்று' படம் குறித்த சூப்பரான தகவல்

கடந்த சில நாட்களாக சூர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலை தளங்களை டிரெண்டாக்கி வருகின்றன என்பது தெரிந்ததே.

'அருவி' அதிதிபாலனா இது? ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் உருவான 'அருவி' என்ற திரைப்படத்தில் நடித்த அதிதிபாலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. எய்ட்ஸ் நோயாளியாகவும்

17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென