"மண்டல் கமிஷன் பற்றி தெரியாமல் போராடினேன்.. நான் சாதியவாதி அல்ல"..! அனுராக் காஷ்யப்.
Send us your feedback to audioarticles@vaarta.com
"என் டீன் ஏஜ் காலத்தில் மண்டல் கமிஷனுக்கு எதிராக போராடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என தன்னை சாதியவதி என்றவர்களுக்கு அனுராக் காஷ்யப் பதில் கூறியுள்ளார்.
ட்விட்டரில் மட்டுமே அனுராக் ஆவேசம் காட்டுவதாகவும் களத்தில் நிற்கத் தைரியம் இல்லாதவர் என்றும் ட்விட்டரில் பலர் அனுராக் காஷ்யப்-க்கு எதிராக ட்வீட் செய்து வந்தனர். இதற்குப் பதிலளித்த அனுராக், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை போராட்டத்தில் கலந்து கொண்டேன். கடந்த 2011-ல் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்திலும் முன்னனியில் இருந்தேன்.
கடந்த 90களில் மண்டல் கமிஷனுக்கு எதிரானப் போராட்டத்திலும் கலந்துகொண்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். மண்டல் கமிஷன் என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆதரித்து வழங்கியது. இதற்கு எதிராகப் போராடியதால் அனுராக் சாதியவாதி என்பது தெரிய வந்துள்ளதாக ட்விட்டரில் கண்டனங்கள் கிளம்பின.
ஆனால், இதற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்ட அனுராக் காஷ்யப், “அப்போது எனக்கு 19 வயது. என்னவென்று தெரியாமல் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால், சாதியவாதி இல்லை. என் இளமைப் பருவத்தில் விவரம் இல்லாமல் நிறைய செய்துள்ளேன். ஆனால், இப்போது நான் நிறையவே மாறியுள்ளேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com