ஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது? பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகரும் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நெட்டிசன்களால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தால் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவில் தடை செய்யப்பட்ட போதை மருந்தை அனுராக் உட்கொண்டிருப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் மும்பை காவல்துறைக்கு வீடியோவை பகிர்ந்தனர்.
இதற்குப் பதில் சொன்ன அனுராக், "ஆமாம் காவல்துறையினரே. அதைப் பாருங்கள். முதலும் கடைசியாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் புகையிலையைச் சுருட்டிப் பிடிக்கிறேன். தயவுசெய்து நையாண்டி செய்பவர்களின் திருப்திக்காக நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று பதிலடி கொடுத்தார். ஆனாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து புகையிலையாக இருந்தாலும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி புகையிலை கிடைத்தது என்று கேள்வி எழுப்பினர்.
ஒருசிலர் நக்கலுடன் ’நீங்கள் சுருட்டிய புகையிலையை மருந்துக்கடை, காய்கறி கடையில் இருந்து வாங்கினீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்களில் தொடர் கேள்விகளால் அனுராக் காஷ்யப் சிக்கலில் இருப்பதாக தெரிகிறது.
Yes please for once @MumbaiPolice look into it. Once and for all let’s make it clear that I roll tobacco and please thoroughly investigate for the satisfaction of the bhakts and the trolls .. https://t.co/ZHv3CwpVBG
— Anurag Kashyap (@anuragkashyap72) April 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments