ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்.. அயோத்தியில் ரஜினியை சந்தித்த பிரபலத்தின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் அவரை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ளார். மேலும் பல பாலிவுட் திரையுலக பிரபலங்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாரின் நண்பராக இருந்து வரும் அனுபம் கெர், ரஜினி அயோத்திக்கு வந்துள்ளதை தெரிந்து கொண்டு அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’என்னுடைய நண்பரும் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ராமஜென்ம பூமியான அயோத்தியில் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என பதிவு செய்துள்ளார். மேலும் ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ’ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ’தலைவா’ என்றும் பதிவு செய்துள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான ’வாஃபாதார்’ என்ற திரைப்படத்தில் ரஜினி மற்றும் அனுபம் கெர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த் மும்பை செல்லும் போதெல்லாம் தனது நண்பர் அனுபம் கெர் அவர்களை தவறாமல் சந்திப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Amazing to meet my friend and one and only superstar #RajniKanth in Shri Ram Janm Bhumi, #Ayodhya! Jai Shri Ram! ❤️🕉🙏 #Thalaiva pic.twitter.com/XcZplkYP2E
— Anupam Kher (@AnupamPKher) January 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments