இவ்வளவு அழகாக பாடுவாரா அனுபமா பரமேஸ்வரன்? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

தமிழ் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனுபமா இவ்வளவு அழகாக பாடுவாரா? என ஆச்சரியத்துடன் வீடியோவுக்கு லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த ’கொடி’ மற்றும் அதர்வா நடித்த ’தள்ளிப்போகாதே’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். அந்த வகையில் அவர் சமீபத்தில் தமிழ் பாடல் ஒன்றை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவித்து வருகிறது. இவ்வளவு அழகாக பாடுவாரா அனுபமா பரமேஸ்வரன்? என்கிற ரீதியில் கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘சைரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.