நான் உண்மையா காதலித்தேன்… ஆனால்? நடிகை அனுபமாவின் உருக்கமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “பிரேமம்”. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி“ படத்தில் நடித்து இருந்தார். தற்போது நடிகர் அதர்வா ஜோடியாக இவர் நடித்து இருக்கும் “தள்ளிப்போகாதே“ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
மலையாளம், தமிழைத் தவிர இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கூடவே கன்னட மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகை அனுபமா இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை திருமணம் செய்ய போகிறார் என்பது போன்ற வதந்திகள் கிளம்பி பெரும் பரபரப்பானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இவரிடம் ரசிகர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த நடிகை அனுபமா, நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன். ஆனால் முறிந்துவிட்டது. அந்தக் காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் ரசிகர்களுடன் நடைபெற்ற அந்த உரையாடலில் தனக்கு கேரள வகை உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றும் நான் அடிக்கடி பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்றும் தெரிவித்து உள்ளார். கூடவே சமீபத்தில் ஓவியம் வரையத் துவங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களுடன் நடத்திய இந்த உரையாடல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com