மீண்டும் தொடங்கியது கொரோனா நிவாரண நிதி: ஆரம்பித்து வைத்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Sunday,April 25 2021]

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக முதல்வர் நிவாரண நிதியாகவும், தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் கோடிக்கணக்கில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கினார்கள் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த், அஜித் விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கில் வழங்கிய நிதியால் படப்ப்பிடிப்பு இன்றி வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்பட்ட திரையுலக தொழிலாளர்கள் பலரும் பயனடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தலைவிரித்தாடும் வரும் நிலையில் திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழ், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் கேரள அரசுக்கு தனது சார்ப்பில் நிதி வழங்கி உள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேரள அரசுக்கு நிதி வழங்கியது குறித்த ஆதார புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய கடமையை செய்துவிட்டேன், நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுத்து உதவி செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகளும் தமிழக அரசுக்கும் நலிவடைந்த திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'மெர்சல்' 'பிகில்' படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

'மெர்சல்' 'பிகில்' படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

சென்னை திரும்பினார் தளபதி விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வந்தோம்.

விஜய் டிவி 'ஜோடி' ப்ரியா மஞ்சுநாதனா இவர்? குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம்!

விஜய் டிவி மூலம் பலர் பிரபலங்களாக மாறியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் 'ஜோடி' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிரியா மஞ்சுநாதன் என்பது பலர் அறிந்ததே.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பிரபல தமிழ் நடிகையின் சகோதரர்!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரிந்ததே.

திடீரென வீதிக்கு வந்த நடிகை விஜயலட்சுமி: ஹரிநாடார் காரணமா? 

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் தரைதளத்தில் நடிகை விஜயலட்சுமி தங்கியிருந்தார். தனது சகோதரியின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துவிட்டு