மீண்டும் தொடங்கியது கொரோனா நிவாரண நிதி: ஆரம்பித்து வைத்த தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக முதல்வர் நிவாரண நிதியாகவும், தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் கோடிக்கணக்கில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கினார்கள் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த், அஜித் விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கில் வழங்கிய நிதியால் படப்ப்பிடிப்பு இன்றி வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்பட்ட திரையுலக தொழிலாளர்கள் பலரும் பயனடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தலைவிரித்தாடும் வரும் நிலையில் திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழ், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் கேரள அரசுக்கு தனது சார்ப்பில் நிதி வழங்கி உள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேரள அரசுக்கு நிதி வழங்கியது குறித்த ஆதார புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய கடமையை செய்துவிட்டேன், நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுத்து உதவி செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகளும் தமிழக அரசுக்கும் நலிவடைந்த திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Have done my part... pls contribute that little you can !!! https://t.co/aExMt4W5h4 pic.twitter.com/BzuM87TliO
— Anupama Parameswaran (@anupamahere) April 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com