'கொடி' படத்தில் இருந்து மடோனாவும் நீக்கமா?

  • IndiaGlitz, [Thursday,February 11 2016]

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி திடீரென அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 'பிரேமம்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' நாயகி மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷாமிலிக்கு பதிலாக நடிக்கப்போவது 'பிரேமம்' நாயகி மடோனா செபாஸ்டியன் இல்லை என்றும், அதே பிரேமம் படத்தில் நடித்த மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் என்றும் புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

அண்ணன் - தம்பி என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் தனுஷூடன் முதன்முதலாக த்ரிஷா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.