விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய்சேதுபதி 46’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பழனி, தனுஷ்கோடி, பொள்ளாச்சி உள்பட ஒரு சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விதியாசமான காவல்துறை அதிகாரி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் சேதுபதி ஒரு சில படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தாலும் அவற்றின் சாயல் இல்லாதவாறு இந்த கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்றும், அதே போல் அவருடைய கேரக்டரில் நகைச்சுவை தன்மை அதிகமாக இருக்கும் என்றும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்க இருக்கிறார் என அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அளவில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.@anukreethy_vas joins the cast of #VJS46.
— Sun Pictures (@sunpictures) September 28, 2021
Team VJS 46 wishes her a very Happy Birthday!@VijaySethuOffl @ponramVVS @immancomposer pic.twitter.com/qstj6QWayq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments