அனுபமா பரமேஸ்வரன் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது? லைகா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’லாக்டவுன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். ஏஆர் ஜீவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, இது குறித்த சூப்பர் ஸ்டில் ஒன்றும் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என்.ஆர்.ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையில், சக்திவேல் ஒளிப்பதிவில் , சாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’பைசன்’ என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் நாயகி என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ’லாக்டவுன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Mark your calendars! 🗓️ 'LOCKDOWN' is releasing in cinemas this JUNE. 🤩 Get ready to unlock the gripping tale of emotions! 🎬@anupamahere #ARJeeva @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @shakthi_dop @NRRaghunanthan @sidvipin @EditorSabu #AJayakumar @sherif_choreo… pic.twitter.com/MZx9MwOkUD
— Lyca Productions (@LycaProductions) May 31, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments