close
Choose your channels

விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி குறித்த தகவல்!

Friday, March 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் 46வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாகவும், பழனி தனுஷ்கோடி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அவர் நடித்த ’சேதுபதி’ படத்தின் சாயல் இல்லாமல், இந்த படத்தின் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தில் அவருடைய கேரக்டரில் நகைச்சுவை தன்மை அதிகம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் இந்த திரைப்படம் அவருடைய ஸ்டைல் மற்றும் என்னுடைய ஸ்டைல் இணைந்து இருக்கும் வகையில் போலீஸ் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment