விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் 46வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாகவும், பழனி தனுஷ்கோடி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அவர் நடித்த ’சேதுபதி’ படத்தின் சாயல் இல்லாமல், இந்த படத்தின் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தில் அவருடைய கேரக்டரில் நகைச்சுவை தன்மை அதிகம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் இந்த திரைப்படம் அவருடைய ஸ்டைல் மற்றும் என்னுடைய ஸ்டைல் இணைந்து இருக்கும் வகையில் போலீஸ் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

More News

அஜித், விஜய்யை அடுத்து அண்ணாச்சியையும் பாராட்டிய காவல்துறை அதிகாரி!

அஜித் விஜய்யை அடுத்து அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன் அவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது

ஆட்டோவில் சென்ற தல அஜித்: வைரல் வீடியோ!

தல அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால் டாக்சியில் சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம்

எதிர்க்கட்சி தலைவரை விமர்சனத்தால் தாக்கிய தமிழக முதல்வர்! அதிரும் வீடியோ!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மநீக, அமமுக, நாம் தமிழர் கட்சி என்று ஐந்து கட்ட போட்டி நிலவிவருகிறது.

தேர்தல் அறிக்கையால் பிரச்சாரக் களத்தில் தொடர்ந்து பாராட்டப் படும் தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்: ஷிவாங்கியின் ஆதங்கத்திற்கு காரணம் என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளை என்று கூறப்படும்