தமிழ் திரைப்பட இயக்குனரின் காதல் வலையில் வீழ்ந்தாரா அனு இமானுவேல்?

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவரை நடிகை அனு இமானுவேல் காதலிப்பதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அனு இமானுவேல் அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் ’எனக்கு 20 உனக்கு 18’ ’கேடி’ உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியவரும், தற்போது தெலுங்கில் பிசியான இயக்குனராக இருந்து வரும் ஜோதி கிருஷ்ணா என்பவரின் காதலில் அனு இமானுவேல் விழுந்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசு பரவி வருகிறது. இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கிய ’ஆக்சிஜன்’ என்ற படத்தில் நடித்தபோது தான் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் சகோதரர் ரவி கிருஷ்ணா என்பவரும் ஒரு நடிகர் என்பதும் ஜோதி கிருஷ்ணா மற்றும் ரவி கிருஷ்ணா ஆகிய இருவரும் பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் மகன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அனு இமானுவேல் மற்றும் ஜோதிகிருஷ்ணா ஆகிய இருவரும் தற்போது டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் மிக விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

More News

விஜே சித்ரா நடித்த திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்: அதிரடி அறிவிப்பு!

சின்னத்திரை நடிகையும் விஜேயுமான சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத் திரை உலகை மட்டுமின்றி பெரிய திரையையும்

சூர்யா, கார்த்திக் பட நடிகையின் வேற லெவல் யோகா… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று”, “தேவ்“ படங்களில் நடித்தவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்திசிங்.

மார்டன் லுக்கில் பரதேசி பட நடிகை… வைரலாகும் ஸ்லிம்பிட் புகைப்படம்!

இயக்குநர் பாலாவின் மைல்கல் படமான “பரதேசி” படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றவர் நடிகை வேதிகா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளருமான தா பாண்டியன் அவர்கள் சற்று முன்னர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 88

ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டது 'சூரரை போற்று': சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில், சுதாகொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது